ஐதராபாத்: பவன் கல்யாண், லீலா, அசுதோஷ் ராணா, நவாப் ஷா, ‘கேஜிஎஃப்’ அவினாஷ், கவுதமி, நர்ரா ஸ்ரீனு, நாகா மகேஷ், டெம்பர் வம்சி நடிக்கும் படம், ‘உஸ்தாத் பகத்சிங்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். ஹரிஷ் சங்கர்.எஸ் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இதில் அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கே.தசரத் திரைக்கதை எழுத, கூடுதல் எழுத்தாளராக சி.சந்திரமோகன் பணிபுரிகிறார்.
35