தெலுங்கில் அல்லு சிரிஸ் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படம், ‘ஃபட்டி’ (Buddy). இதில் ஹீரோயினாக நடிக்கும் பிரிஷா சிங், ‘கார்த்திகேயா’ படத்தின் ஹீரோ நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ என்ற பான் இந்தியா படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரு பிரமாண்டமான படங்களின் மூலம் அறிமுகமாவது குறித்து சந்தோஷப்படும் பிரிஷா சிங் கூறுகையில், ‘என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், ‘ஸ்பை’.
அதிரடி ஆக்ஷன் படமான இதில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. படம் வெளியான பிறகு எனது கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ‘ஃபட்டி’ ‘Buddy’ படத்தில் ஏர்-ஹோஸ்டஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். இப்படத்தில் நடித்த பிறகு நிறைய புது விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். விரைவில் நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பேன். விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார்.