ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில், பேராசிரியை கேரக்டரில் நடித்துள்ளார் இந்துஜா. இதுபற்றி அவர் கூறுகையில், ‘ஆத்திகா என்ற பேராசிரியை வேடத்தில் நடிக்கிறேன். பார்க்கிங்கில் நடக்கும் பிரச்னை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது கதை. திரைக்கதை பரபரப்பாக இருக்கும். சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். திடீரென்று கேரக்டர் ரோலில் நடித்தால், பிறகு ஒரேமாதிரியான வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டியிருக்கும். எனவே, கடைசிவரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்.
திரையுலகில் எனக்கு நெருங்கிய தோழிகள் கிடையாது. எந்த நடிகையையும் எனக்குப் போட்டியாக நினைக்க மாட்டேன். அதுபோல், யாரையும் பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன். என்னைத்தேடி வரும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிப்பேன். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகள் என்னைத்தேடி வருகின்றன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்திருந்தால், அதிலும் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே அதுபோன்ற படங்களில் நடிப்பேன்’ என்றார்.
73