லாஸ்ஏஞ்சல்ஸ்: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘கல்கி 2898 AD’ என வைக்கப்பட்டுள்ளது. 2898ஆம் ஆண்டு நடைபெறும் கல்கி அவதார நிகழ்ச்சியின் கதை அம்சம் கொண்டது இந்த படம் என்பது கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று அதிகாலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. 30ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. பிரபாஸ், பசுபதி, தீபிகா படுகோன் தோன்றும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தன. ஹாலிவுட் படங்களின் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீசாக உள்ளது.