சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தன்னிடம் ரூ10 கோடிக்கு அதிகமான 6 சொகுசு கார்களை வைத்திருக்கிறார். நயன்தாராவுக்கு பிறகு அனுஷ்கா அதிக சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், இப்போது அனுஷ்காவை பின்னுக்கு தள்ளி சமந்தா முன்னேறிவிட்டார். அவர் ஒரு படத்துக்கு ரூ4.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இது மட்டுமின்றி விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கிறார். வெப்சீரிஸ்களில் நடிக்க ரூ6 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சமந்தாவிற்கு கார் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர், 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் முதல் போர்ஷே கேமன் ஜிடிஎஸ் வரை சொந்தமாக 6 கார்களை வைத்து இருக்கிறார்.
அதன் விவரம்: லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் – ரூ2.26 கோடி. போர்ஷே கேமேன் – ரூ1.46 கோடி. ஜாகுவார் எக்ஸ்எஃப் – ரூ72 லட்சம். மெர்சிடீஸ் பேன்ஸ் ஜி63 ஏஎம்ஜி – ரூ3.30 கோடி. ஆடி க்யூ7 – ரூ87 லட்சம். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் – ரூ1.70 கோடி. ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ஆடம்பரமான வீட்டில் சமந்தா வசித்து வருகிறார். ஐதராபாத்தில் அவருக்குச் சொந்தமாக அரண்மனை போன்ற பங்களா, ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. கூடுதலாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமந்தா மும்பையில் ரூ15 கோடி மதிப்புள்ள 3 பெட்ரூம் கொண்ட வீட்டை வாங்கியிருக்கிறார்.