சென்னை: தமிழ் சினிமாவில் ‘களரி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த படத்தினை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழை விட சம்யுக்தா மேனன் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், 28 வயதான சம்யுக்தா மேனன் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் புதிய தகவல் வைரலாகி கொண்டு இருக்கிறது. உண்மையில் சம்யுக்தா மேனன் திருமணம் செய்து கொள்கிறாரா? அல்லது இப்படி பரவுவது வெறும் வதந்தி தகவலா என்பதை அவரே சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்யுக்தா தற்போது ‘டெவில்: பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
176