சென்னை: சந்தானம் நடிப்பில் அடுத்த காமெடி கதை கொண்ட புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ மற்றும் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு ‘பில்டப்’ என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சந்தானம் உடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த ‘பில்டப்’ திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், முனீஸ் காந்த், மன்சூர் அலிகான், டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் எம்.எஸ்.பாரதி படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் சந்தானத்தின் ‘பில்டப்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.