சென்னை: பரத் நடித்துள்ள 50வது படம், ‘லவ்’. ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். ஆர்.பி.பாலா எழுதி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பரத் கூறியதாவது: 50 படங்களில் நடித்து, பல வெற்றிகளைக் கொடுத்துள்ளேன் என்றாலும், சினிமாவில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். வலுவான சினிமா பின்புலம் இல்லாததே தொடர்ச்சியான எனது போராட்டத் துக்கு காரணமாகும். சரியான பின்புலம் இல்லை என்று நான் சோர்ந்து போயிருந்தால், இன்று இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது.
பின்புலம் இருந்திருந்தால், நான்கைந்து கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிக்கும் நான், 10 அல்லது 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடித்து இருப்பேன். அடுத்து வசந்தபாலன் இயக்கும் வெப்தொடரில் நடிக்கிறேன். ‘முன்னறிவான்’ படத்தில் நடிக்கிறேன். விரைவில் முக்கிய இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்கிறேன். அதற்காகவே தாடி, மீசை வளர்த்து வருகிறேன்.