சென்னை: கடந்த 2008 ஜூலை 4ம் தேதி திரைக்கு வந்த படம், ‘சுப்ரமணியபுரம்’. இதை சசிகுமார் இயக்கி நடித்து தயாரித்தார். முக்கிய வேடங்களில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்தனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத் திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்த இப்படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப்படத்தை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சசிகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அந்த அனுபவத்தை உயிர்ப்பிக்க, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது’ என்றார்.
49