சென்னை: கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவழி நடிகை சன்னி லியோன். அங்கு பார்ன் ஸ்டாராக இருந்தவர், பின்னர் இந்தியா வந்து பாலிவுட் நடிகை ஆனார். தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்து வந்த ‘வீரமாதேவி’ என்ற படம் டிராப் ஆனது. கடைசியாக ‘தீ இவன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். ‘மதுரராஜா’ என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அங்கு அறிமுகமானார்.
தற்போது ‘ரங்கீலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் தயாராகும் ‘பான் இண்டியன் சுந்தரி’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதனை சதீஷ்குமார் என்பவர் இயக்குகிறார். மாளவிகா ஸ்ரீகாந்த் நாயகியாக நடிக்கிறார். இதில் சன்னி லியோன் ஒரு திரைப்பட நடிகையாகவே நடிக்கிறார். இவர்களுடன் அப்பானி சரத், மணிகுட்டன், ஜான் ஆன்டனி, பீமன் ரகு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இது அடல்ட் காமெடி தொடராக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.