கடந்த 2020ல் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு நடிப்பில் ஓடிடியில் வெளியான படம், ‘சூரரைப்போற்று’. தேசிய விருதுகள் பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், ராதிகா மதன், பரேஷ் ராவல் ஆகியோருடன் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடலை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒலிப்பதிவு செய்தார். இதையடுத்து படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.