சென்னை: பாலிவுட் நடிகர் பாபி தியோல் தமிழில் அறிமுகமாகிறார். சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நட்டி நடராஜ் வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் பாபி தியோல்தான் மெயின் வில்லன் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் ‘கங்குவா’ படத்தின் பிளாஷ்பேக் சரித்திர கால காட்சிகளுக்கு நட்டி நடராஜ் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவரது காட்சிகள் தற்போது கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. நட்டி நட்ராஜ் நடித்தாலும் அவர் மெயின் வில்லன் கிடையாது என்பது தெரியவந்துள்ளது. பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள பாபிதியோல், ‘கங்குவா’ படத்தில் இணைந்துள்ளதை படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உறுதி செய்துள்ளார். தர்மேந்திராவின் இளைய மகனான பாபி தியோல், ஹீரோவாக நடித்து வருகிறார். அதே சமயம் வில்லன் கேரக்டர்களையும் அவர் ஏற்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.
59