கொச்சி: வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியின் கேரக்டர் தேர்வு குறித்து விஜய் அதிக ஆர்வம் காட்டி பாராட்டியது குறித்து ஜெயராம் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது. ‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பதிரா’ போன்ற மலையாளப் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான மெடிக்கல் கிரைம் கதை கொண்ட படம், ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’. இதில் முதன்மை வேடத்தில் ஜெயராம், சிறப்பு கேரக்டர் ஒன்றில் மம்மூட்டி நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
அவர் கூறும் போது, ‘விஜய்யிடம் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ பற்றி நான் சொன்னேன். உடனே அவர், இதில் மம்மூட்டி நடித்தாரா என்று ஆர்வத்துடன் கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘அப்படி என்றால், உடனே நான் இப்படத்தைப் பார்க்க வேண்டும். மம்மூட்டி நடித்தால், கண்டிப்பாக அந்த கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். அதில் அவர் ஏதாவது ஒரு விஷயத்தைப் புதிதாக செய்திருப்பார்’ என்று பாராட்டினார். பிறகு விஜய்க்காக எங்கள் படத்தை பிரத் தியேகமாக திரை யிட்டோம்’ என்றார்.