மும்பை: பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. சர்ச்சைக்குரிய கதைகளில் நடித்தும், சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியும் புகழ்பெற்றவர். தென்னிந்திய சினிமாவில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி வெளிப்படையாக பேசியவர். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘மிசஸ் அண்டர்கவர்’ என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. சில குறும்படங்களில் அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் நடித்தார்.
தற்போது அவர் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை ராம் ராகவன் இயக்கி வருகிறார். இவர், இந்தியில் ஜானி கட்டார், ஏஜென்ட் வினோத், பட்லாபூர், அந்தாதுன் உட்பட சில படங்களை இயக்கியவர். ராதிகா ஆப்தே நடிக்கும் கேரக்டர் பற்றிய தகவல்களை தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை.