பெண்கள் தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக ‘லோக்கல் சரக்கு’ உருவாகியுள்ளது. திரைக்கு வந்த ’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், முக்கிய வேடத்தில் யோகி பாபு, உபாசனா ஆர்.சி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம்புலி, வையாபுரி, சென்ராயன், வினோதினி நடித்துள்ளனர். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வாலன்டினா சுவாமிநாதன், டாக்டர் பத்மா வெங்கடசுப்பிரமணியன் தயாரித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ளார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார். இவர், இசை அமைப்பாளர்கள் சங்கர், கணேஷ் ஆகியோரிடம் பணியாற்றியவர். எம்.மூவேந்தர், கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் நடுத்தர குடும்பம் ஒன்றில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், குடும்பத்தலைவர் பொறுப்பற்றவராக இருந்தால், அக்குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பது பற்றி சொல்லப்படுகிறது.