தமிழில் தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மஞ்சு வாரியர் கேரக்டரில் அனுஷ்காவும், அதன் பிறகு ஸ்ரேயாவும் நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அம்மு அபிராமி கேரக்டரில் நடிக்க அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருணாஸ் மகன் கென், தெலுங்கிலும் அதே வேடத்தில் நடிக்கிறார்.
34