அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் தற்போது பைக் ரேஸ் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என்று ஏற்கனவே பட தயாரிப்பார் போனிகபூர் குறிப்பிட்டிருந்தார். சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து வருகிறார் அஜீத். இதற்கிடையில் படப்பிடிப்பிலிருந்து அவ்வப்போது சில காட்சிகள் நெட்டில் லீக் ஆவது பட குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே கண்காணிப்பை பட குழு தொடங்கியிருந்தாலும் மீண்டும் ஒரு காட்சி லீக் ஆகியிருக்கிறது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் வினோத்.
7