சிவகார்த்திகேயன் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் காமெடியன் சூரி சிவகார்த்திகேயனை நேரடியாக சந்தித்து சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு நேரடியாக கேக்குடன் சென்ற சூரி, அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சூரி கொண்டு வந்த கேக்கில் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இப்படியொரு அண்ணன் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் சூரியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
5