நடிகர்களைப்போலவே நடிகைகளும் நடன காட்சிகளில் ரிஸ்க் எடுக்கின்றனர். வேகமாக ஆடும் நடன காட்சிகளில் சில சமயம் நடிகர்களுக்கு தசை பிசகுதல், எலும்பு முறிவு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறது. பிரபுதேவா, சிம்பு, தனுஷ், விஷால் போன்றவர்கள் இதுபோல் ரிஸ்க்கான நடனம் ஆடுகின்றனர். நடிகை களில் தமன்னா பிரத்யேக நடன அசைவுகளை முயற்சிக்கிறார். ரவுடி பேபி பாடலில் நடிகை சாய் பல்லவி செம குத்து போட்டிருந்தார். இவர்களையெல் லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் ராஷ்மிகா. மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா நடித்த ‘சரிலேரு நீக்கெவ்வரு’ தெலுங்கு படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் இடம் பெறும் பாடலை பிரபலப்படுத்த அவ்வப்போது ராஷ்மிகா இணைய தளத்தில் நடனம் ஆடி வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். தற்போது படக்குழுவே ‘மைன்ட் பிளாக்’ என்ற பாடலை இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பாடலின் தொடக்கத் தில் ராஷ்மிகா திடீரென்று பின்புறமாக அதாவது பேக் பிளிப் எனப்படும் ஸ்டைலில் டைவ் அடித்து நிற்கும் அசத்தல் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் அசத்தலான மெசேஜ் பகிர்ந்து ராஷ்மிகாவை பாராட்டி உச்சிகுளிர வைத்திருக்கின்றனர்.
31