ஐதராபாத்: தெலுங்கில் கடந்த 2021ல் ரிலீசான ‘சினிமா பண்டி’ என்ற படத்தின் இயக்குனர் பிரவீன் கந்த்ரேகுலா, தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘பரதா’ படத்தை இயக்குகிறார். ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ படத்தில் நடித்திருந்த தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்க, கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள அனுபமா பரமேஸ்வரன், ‘முன்புஎப்போதும் இல்லாத வகையில் புதிய கதை மற்றும் கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன். இப்படம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
155