தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு தி கிரே மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்கா கேரக்டரில் நடித்த கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார் ஆகிய படங்களை இயக்கிய அந்தோணி, ஜோ ரூஸோ இயக்குகின்றனர். இது குறித்து தனுஷ் கூறுகையில், ‘ரயன் காஸ்லிங், கிறிஸ் ஈவான்ஸ் நடிப்பில் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் படத்தில் நானும் இணைந்து பணிபுரிவதில் அதிக மகிழ்ச்சி. இப்படத்தின் ஷூட்டிங்கில் பணியாற்றும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’ என்றார். அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து கர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டார். மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்த பெயரிபடப்படாத ஷூட்டிங்கின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கிற்காக இன்று அமெரிக்காவுக்கு பறக்கும் தனுஷ், அங்கு மே மாதம் வரை தங்கியிருந்து, ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். மே இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
32