அட்டகத்தி, திருடன் போலீஸ், ஆறுவது சினம், தர்மதுரை, முப்பரிமாணம், சாமி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். சிறப்பாக நடிக்கிறார் என்று அவருக்கு பெயர் கிடைத்தாலும் அம்மா வேடத்தில் நடிப்பதால் அவரை ஜோடியாக நடிக்க ஹீரோக்கள் யாரும் அழைப்பதில்லையாம். இதனால் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது,’சினிமாவில் ஹீரோயினுக்கு தேவையான தகுதிகளுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அம்மா வேடங்களிலும் நடித்தேன். இதனால் எனக்கு வயது அதிகமாகி விட்டதாக நினைக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள். இனி அம்மா வேடத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்’ என தெரிவித்தார்.
42