சென்னை: அரபு நாடுகளில் ராஷ்மிகா நடித்துள்ள தமிழ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், ராஷ்மிகா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ள படம் சீதா ராமம். இந்த படத்தில் ராணுவ வீரனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். முஸ்லிம் பெண்ணாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த அரபு நாடுகளின் சென்சார் போர்டு, படத்துக்கு தடை விதிக்க அந்த நாடுகளை பரிந்துரை செய்தது. இதையடுத்து பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சீதா ராமம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் தீவிரவாதம் குறித்த சம்பங்கள், காட்சிகள் இடம்பெறுவதாலும் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாலும் இந்த படத்துக்கு தடை விதித்திருப்பதாக அரபு நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், துல்கர் சல்மான் படங்களுக்கு அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனால் அந்நாடுகளின் வியாபாரத்தை படக்குழு அதிகம் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
11