சென்னை: டி.வி தொடர்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2010ல் ‘ஓர் இரவு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, ‘மகான்’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ‘மிரள்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘தாழ்திறவா’, ‘லவ்’, ‘ஊர்குருவி’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களிலும் மற்றும் ஜெய், விக்ராந்த், நவீன் சந்திரா நடிக்கும் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘எந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் நடிக்க ஆசை?’ என்று வாணி போஜனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இந்தியில் அலியா பட் நடிப்பில் வெளியான ‘கங்குபாய் கத்தியவாடி’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்தால், அதில் அலியா பட் நடித்த வேடத்தில் நான் நடிப்பேன்’ என்று சொன்னார்.
31