சென்னை: இதுவரை 55 குறும் படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஜஸ்டின் பிர பாகரன் (36), விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப் படம் மூலமாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து ‘ஆரஞ்சு மிட் டாய்’, ‘ஒருநாள் கூத்து’, ‘தொண்டன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘மான்ஸ்டர்’ உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். ‘டியர் காம்ரேட்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன், பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்துக்கும் இசை அமைத்தார். இவருக்கும், கரோலின் சூசன்னா என்பவருக்கும் நேற்று மதுரையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத் திரக்கனி, கலையரசன், சாந்தனு, பாலசரவணன், இயக்குனர்கள் பா.ரஞ்சித், நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டனர்.
13