36
மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், மீண்டும் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் கமல் இணைந்து நடிக்கும் படத்தை, கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக வெளியான தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், தெலுங்கு படம் இயக்க அட்வான்ஸ் வாங்கினார் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையே சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை அதிகம் பேர் வைத்து நடத்த முடியாது என்பதால், இயக்குனர் ஷங்கரிடம் பேசிய கமல், இந்தியன் 2க்கு முன் தனது தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வெளியிடுவதை உறுதி செய்தார். இப்படம் திரில்லர் கதையுடன் உருவாகிறது.