பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் மாரி செல்வராஜ். எழுத்தாளராக இருந்து இயக்குனர் ஆனவர், இவரது 3வது படமாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது மாமன்னன் என்ற படத்தை இயக்குகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்பட பலர் நடிக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
உதயநிதியின் புதிய படம்: மாரி செல்வராஜ் இயக்குகிறார்
0 comment
8