மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் தற்கொலைக்கு பிறகு வட இந்தியா ஊடகங்கள் அதுகுறித்த செய்திகளுக்கே அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று கூறப்படுகிறது. இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரபோர்த்தி, ரியா சகோதரர் உள்பட பலரை போதை மருந்து தடுப்பு பிரிவு கைது செய்து விசாரித்து வருகிறது. பாலிவுட்டில் இருக்கும் வாரிசு ஆதிக்கம் பற்றி தினமும் கடுமையாக சாடி வரும் கங்கனா ரனவத்தின் மீது ஒட்டுமொத்த ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். நாட்டில் இதுதவிர வேறு பிரச்னையே இல்லையா என்பது போல் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில், நடிகை டாப்ஸி தனக்கு தோன்றியதை எல்லாம் கருத்து என்ற பெயரில் சொல்லி வந்தார்.தற்போது ஐந்தாம் கட்ட கொரோனா லாக்டவுனில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, வரும் 15ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தியேட்டர்களை திறந்துகொள்ளலாம். 50 சதவிகிதம் பார்வையாளர்களை மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தியேட்டர்கள் என்னென்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இதுபற்றி டாப்ஸி சமூக வலைத்தள பதிவில், ‘நாடு முழுக்க 50 சதவிகித இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி கிடைத்து இருப்பதால், இனி சில ஊடகங்கள் 50 சதவிகிதம் நிஜமான செய்திகள் கொடுப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதுவரையிலும் தேவைக்கு அதிகமான பொழுதுபோக்கு செய்திகள் கொடுத்ததற்கு நன்றி. இனி நடப்பதை நாங்கள் கவனிக்கிறோம்’ என்று, மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார்.
6