சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள படம், ‘புஷ்பா’. ஒரு பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அவரது நடனம் மற்றும் பாடல் வரிகளுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மட்டும் கூலாக இருக்கிறார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பைப் புகழ்ந்து ஐஸ் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது அல்லு அர்ஜூனை மனம் திறந்து பாராட்டும் பதிவு. படத்தில் ஒவ்வொரு நொடியும் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. யாருடைய கவனத்தையும் சிதற வைக்காத நடிகரின் நடிப்பில் நான் அதிக உத்வேகம் பெறுவேன். ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு அந்த வகையைச் சேர்ந்தது. அவரது டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ், ஒருபுறமாக தோள்பட்டையை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது என எல்லாமே பாராட்டுக்குரியவை’ என்று புகழ்ந்துள்ளார். இது சமந்தாவுடன் இணைந்து நடித்த சில ஹீரோக்களை எரிச்சலடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
29