தெலுங்கில் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார், பிரபாஸ். இந்த 4 படங்களின் முதலீடு ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், பிறகு கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார், ஓம் ராவத் இயக்கும் ஆதிபுருஷ் மற்றும் மகாநடி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 2022 இறுதிவரை பிரபாஸ் கால்ஷீட் தரப்பட்டுள்ளது. இந்த 4 படங்களும் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. தற்போது பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.அவர் நடிக்கும் 4 படங்களின் முதலீட்டை கணக்கிட்டு பார்த்தால், தோராயமாக ஒரு படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி 4 படங்களுக்கும் சேர்த்து 1,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பாகுபலி, பாகுபலி 2 இரண்டு பெரிய படங்களின் வெற்றியே பிரபாஸை நம்பி இத்தனை கோடிகள் முதலீடு செய்திருப்பதற்கு காரணமாகும். ஒரே நேரத்தில், ஒரே ஹீரோவை நம்பி இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து சினிமா வல்லுநர்கள் ‘ஆச்சரியமாகவும், சற்று பயமாகவும் இருக்கிறது’ என விமர்சித்து வருகின்றனர். பாகுபலி 2 படத்துக்கு பின் வெளியான பிரபாஸின் சாஹோ, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6