இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள கேரக்டரின் பெயர், ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஹூந்திரன்’ என்றும், சுருக்கமாக ‘ராம்போ’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமந்தாவின் கேரக்டர் பெயர், கதீஜா. நயன்தாராவின் பெயர், கண்மணி. தவிர, இப்படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதையும் பதிவு செய்துள்ளனர். சில வாரங்களாகவே இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அது வதந்தி என்று கூறியுள்ளது படக்குழு.
26