ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓ மை கடவுளே படத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் என்பவர் புகார் அளித்துள்ளார். படத்தின் நாயகி வாணி போஜனை அழைப்பதாக கூறி தன்னுடைய செல்போன் எண்ணிற்கு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அழைத்து ஆபாசமாக பேசுவதாகவும் தெரிவித்தார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்துள்ள ஓ மை கடவுளே படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
6