இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி. தெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துவிட்டு மலையாளத்துக்கு சென்றார். பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் அறிமுகமானார். ஆனால், அவருக்கான முக்கியத்துவமோ அல்லது தனித்துவமோ கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது தந்தை இயக்கிய பல மொழிப் படமான மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிங்ஹம் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங்கில் சரியாக நடிக்க முடியாமல் பிரியதர்ஷனிடம் டோஸ் வாங்கிய கல்யாணி, சோகத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறிவிட்டாராம். தவிர, ஹிருதயம் என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் அவர், தமிழில் வான், மாநாடு ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். பெரிய அளவில் வருவோம் என்று நம்பிய அவர், படத்தில் ஹீரோயின் என்பது போன்ற முக்கியத்துவம் இல்லாத கதைகள் அமைவது குறித்து கவலைப்படுகிறாராம். இந்நிலை எப்போது மாறும் என்று சிலரிடம் கேட்டுள்ள அவர், திறமையை வெளிப்படுத்துவதற்கான கேரக்டரில் நடித்து, கமர்ஷியல் ஹீரோயின் என்ற அந்தஸ்துக்கு வர தீவிரமாக யோசிக்கிறாராம்.
31