தமிழில் நேரம் மற்றும் மலையாளத்தில் பிரேமம் ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், அடுத்து இயக்கும் படம் கோல்ட். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அல்போன்ஸ் புத்திரன், ‘கோல்ட் படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நேரம் மற்றும் பிரேமம் போன்ற படமல்ல இது என்றும், இது வேறு மாதிரியான படம் என்றும், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல நடிகர்கள், பாடல்கள் மற்றும் நகைச்சுவையுடன் இந்த படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ‘வழக்கம்போல் ஒரு எச்சரிக்கை என்றும், ஆக்ஷனையும் காதலையும் எதிர்பார்த்து யாரும் இந்த படத்திற்கு வரவேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. காமெடி காட்சிகள் படத்தில் அதிகம் இருக்குமாம்.
5