நடிகர் ரகுமான், மகள் கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயது நிரம்பிய அவர் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்று தனது தந்தையிடம் தனக்கு சொந்த கார் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் கார் பற்றி அவரிடம் பல கேள்விகள் கேட்ட ரகுமான். தனி ஆளாக, யாரின் உதவியும் இன்றி, காரின் டயரை கழற்றி வேறு டயரை மாட்ட முடிந்தால் கார் வாங்கித் தருகிறேன். என்று கூறியிருக்கிறார். அதன்படி அவரும் கார் டயரை கழற்றி மாட்டி காட்டியிருக்கிறார். இதனை வீடியோவாக ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.இதுகுறித்து ரகுமான் கூறியதாவது: குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பது தந்தையின் கடமை. ஆனால் அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்தே செய்ய வேண்டும். கார் ஓட்ட மட்டும் தெரிந்தால் போதாது. காரின் அடிப்படை மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவே மகளுக்கு தேர்வு வைத்தேன். என்கிறார் ரகுமான்.
27