நாகேஷ் திரையரங்கம், 90 எம்எல் படங்களில் நடித்தவர் மாசூம் சங்கர். இப்போது ஆர்யா, சாயிஷா நடித்து வரும் டெடி படத்தில் நடிக்கிறார். நடிகர்களில் சிலர் கார் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் அதில் பங்கேற்பவர்களாகவும் உள்ளனர். நடிகர்கள் அஜித், ஜெய் ஆகியோர் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ளனர். நடிகைகளில் அதுபோல் யாரும் கார் பந்தயங்களில் பங்கேற்பதில்லை.ஆனால் அந்த வழக்கத்தை மாற்றிக் காட்டியுள்ளார் நடிகை மாசூம் சங்கர். இவர் கார் ரேஸில் பங்கேற்க தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் இவர் பங்கேற்க தயாராகி வருகிறாராம். இதுபற்றி மாசூம் சங்கர் கூறும்போது, ‘சிறு வயது முதல் கார் பந்தயத்தை பார்ப்பது பிடிக்கும். அதில் ஏன் நாம் பங்கேற்க கூடாது என்ற எண்ணம்தான், ஈடுபாடு ஏற்பட காரணம். சீக்கிரமே எனது கனவு நிறைவேறப்போகிறது’ என்றார்.
35