பொதுவாகவே நடிகை சமந்தா ஊர்சுற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்காவது சென்று விடுவார். அவை எதையும் அவர் திட்டமிட்டுச் செய்வதில்லை. அன்றைக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார். எங்கு செல்ல தோன்றுகிறதோ அங்கு சென்று விடுவார். புஷ்பா பாடல் ஒரு புறம் உலகம் முழுக்க வெறித்தனமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாடல் ஆண்களை அவதூறு செய்கிறது என்ற புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த படங்கள், வெப் சீரிஸ்கள் என வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தி பேமிலி மேன் தொடரில் படுக்கை அறை காட்சியில் சமந்தா நடித்ததுதான் அவர் நாக சைதன்யாவை பிரிய காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் நாகசைதன்யா என் குடும்ப கவுரவத்தை பாதிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி அதனை உறுதிபடுத்தியிருக்கிறார். இந்த நிலையில் எதை பற்றியும் கவலைப்படாமல் கேரளா சென்று விட்டார் சமந்தா. ஆலப்புழா பேக் வாட்டரில் படகு வீட்டில் தங்கி இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விரைவில் அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
8