தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம், கைதி. ஹீரோயினே இல்லாமல் உருவான இப்படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், இதன் இந்தி ரீமேக் உரிமையை வாங்க சில தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இந்தியில் தயாரிக்கின்றனர். கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதை அவரே சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இயக்குனர் முடிவாகவில்லை.
5