வழக்கமாக நட்சத்திரங்களை கிண்டல் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. சமயம் பார்த்து அவரை கிண்டல் செய்து ஸ்கோர் செய்திருக்கிறார் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி.ராம்கோபால் வர்மாவுக்கு திருமணம் ஆகி மகள் இருக்கிறார். ஆனாலும் தனித்து வாழ்வதையே அதிகம் விரும்புகிறார். கடந்த ஆண்டு ராமுவின் மகள் ரேவதிக்கு திருமணம் நடந்தது. அதில் தந்தை என்ற முறையில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் ரேவதிக்கு சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து ராம் கோபால் வர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணமிருக்கின்றனர். பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி கிண்டல் தொனிக்க தெரிவித்துள்ள வாழ்த்து பரபரப்பாக்கி உள்ளது. ‘வாழ்த்துக்கள் ராமு தாத்தா காரு… கடைசியாக உங்களை கட்டுப்படுத்த ஒரு பேத்தி வந்துவிட்டாள். அதிருக்கட்டும் உங்களை ராமு தாத்தா என்று அழைப்பதா? ராமு நன்னா அல்லது தாத்தா ராமு என்று அழைப்பதா? உங்கள் பேத்தியிடம் எப்படி அழைக்க வேண்டும் என்று சொல்லித்தரப்போகிறீர்கள்’ என கேட்டிருக்கிறார்.
6