சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் சாகுந்தலம். தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது. குணசேகர் எழுதி இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர் ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோர் நடிக்கிறார்கள்.படத்தில் சமந்தாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் சமந்தா நேர்த்தியான தோற்றத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார். சமந்தா எங்கோ ஆர்வமாகப் பார்க்கிறார், காட்டில் அவருடன் இருக்கும் தோழமைகள் அவரை பிரமிப்புடன் பார்க்கிறார்கள். இந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.
10