ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் முதல்முறையாக இயக்கியுள்ள படம், ‘சித்திரைச் செவ்வானம்’. தந்தையாக சமுத்திரக்கனி, அவரது மகளாக பூஜா கண்ணன், போலீசாக ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் கதை எழுதியுள்ளார். தந்தைக்கும், மகளுக்குமான பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், 2014ல் தோன்றிய சின்ன ஐடியாவின் அடிப்படையில் திரைக்கதையாக உருவானது. ஏ.எல்.விஜய் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பூஜா கண்ணன் ஓரிரு குறும்படங்களில் நடித்துள்ளார் என்றாலும், பெரிய திரையில் இப்போதுதான் அறிமுகமாகிறார். இவர், சாய் பல்லவியின் தங்கை. நடிப்புக்காக சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 3ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
32