சினிமா, பக்தி, கர்நாடக இசை பாடல்களை வீணையிலேயே மீட்டி வரும் வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா விரைவில் சினிமாவில் இசை அமைக்க வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’இத்தனை ஆண்டுகள் இசை துறையிலி ருந்தும் சினிமாவுக்கு இசை அமைக்காதது ஏன் என்கிறார்கள். இந்த ஆண்டில் சினிமாவுக்கு இசை அமைக்க உள்ளேன். அதேபோல் நடிக்கவும் என்னிடம் கேட்டார்கள். இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால் அதற்கேற்றார்போல் கால்ஷீட் பெற்றுக்கொள்ள சம்மதிக்கும் படங்களில் நடிப்பேன். வரும் 21ம் தேதி சென்னை யில் 100 நிமிடம் 100 பாடல்கள் என்ற இசை நிகழ்ச்சி நடத்துகிறேன். இது கின்னஸ் சாதனை முயற்சியாக இருக்கும். ஏற்கனவே 60 நிமிடம் 60 பாடல்கள் என்ற நிகழ்ச்சி நடத்தினேன்’ என்றார்.
32