சென்னை: யோகி பாபு நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சீன் ஆ சீன் ஆ’ என்ற பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 30 விநாடிகளுக்கும் குறைவான இந்தக் காட்சியில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சென்னையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடினர். கபிலன், லோகேஷ் இணைந்து எழுதிய இப்பாடலுக்கு பரத் சங்கர் இசை அமைத்தார். ஷோபி நடனப் பயிற்சி அளித்தார். இதையடுத்து நடனக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின், படத்தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். ‘மாவீரன்’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின், சுனில் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு நடனக்கலைஞர்கள் நன்றி
0 comment
33