ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி நடித்துள்ள படம், சீறு. இயக்கம், ரத்னசிவா. வரும் 7ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து ஜீவா கூறியதாவது: சினிமாவில் எனக்கு மிகப் பெரிய ரீஎன்ட்ரி படமாக சீறு இருக்கும். கேபிள் டிவி ஆபரேட்டர் வேடத்தில் நடித்துள்ளேன். சாந்தினியின் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக இருக்கும்.வருண் நடித்த கேரக்டரில், முதலில் நான் அவரை வேண்டாம் என்றேன். ஆனால், கரடுமுரடான கேரக்டரில் அற்புதமாக நடித்து அசத்திவிட்டார். நான் நடித்த ஜிப்ஸி படத்தின் ஆடிஷனில் தேர்வாகாத ரியா சுமன், சீறுவில் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்று சமூகத்தில் நடக்கும் மிகப் பெரிய பிரச்னையை ரத்னசிவா சொல்லியிருக்கிறார். கிளைமாக்சில் நடித்துள்ள மாணவிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
35