சென்னை: வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல நாய்கள் இணைந்து சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதை குறித்து சொல்லும் படம், ‘வளட்டி-ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்’. இதில் மலையாள நடிகர்கள் ரோஷன் மேத்யூ, சவுபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் ஆகியோர் செல்ல நாய்களுக்கு டப்பிங் பேசியுள்ளனர். படம் பற்றி கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் கார்த்திக் கவுடா கூறுகையில், ‘இப்படத்தை தெலுங்கில் தில் ராஜூவும், இந்தியில் அனில் ததானியும் வெளியிடுகின்றனர்’ என்றார். விஜய் பாபு வழங்க, ஃபிரைடே பிலிம் ஹவுஸ் தயாரித்துள்ளது. தேவன் இயக்கியுள்ள இப்படம், வரும் ஜூலை 14ம் தேதி மலையாளத்திலும், ஒரு வாரம் கழித்து கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
69