தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. இவர் தனது நடிப்பு ஆற்றலால் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரது பல மலையாள படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவை. கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடுபவர் பார்வதி. அந்த வகையில் அடுத்த மலையாள படத்தில் குஸ்தி வீராங்கனையாக அவர் நடிக்க உள்ளார். இதற்காக ஜிம் உடற்கட்டுக்கு மாற கடும் பயிற்சிகளில் பார்வதி ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்முக்கு சென்று அதிக எடை கொண்ட உபகரணங்களை அவர் தூக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கேரக்டருக்காக தனது உணவு முறையிலும் மாற்றம் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
67