தினேஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘பல்லு படாம பாத்துக்க’. சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை. படம் பற்றி இயக்குனர் கூறும் போது, ’இதுவொரு அடல்ட் காமெடி படம் என்றாலும் முக்கியமான ஒரு சமுதாய கருத்தை சொல்கிறது. படத்தின் டைட்டிலை கேட்டவுடன் தினேஷ் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பிறகு வேறு ஒரு நடிகரை வைத்து உருவாக்க முயன்றேன். அது நடக்கவில்லை. மீண்டும் தினேஷிடமே வந்தேன். இப்படத்தின் கருவை கொண்டு நடிக்க சம்மதித்தார். தணிக்கையில் இப்படத்துக்கு சான்றிதழ் கிடைக்க போராடினேன். கிடைக்கவில்லை. பிறகு நடுவர் குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தில் இடம்பெறும் கெட்டவார்த்தைகளை கட் செய்யச் சொன்னதுடன் சில காட்சிகளுக்கும் கட் கொடுத்து ஏ சான்றிதழ் வழங்கினார்கள்’ என்றார். தினேஷ் பேசும்போது,’ டைட்டிலை கேட்டதும் நடிக்க மறுத்துவிட்டேன். இந்த டைட்டில் இருந்தால்தான் அடுத்த கட்டத்துக்கு படம் போகும் என்ற சூழல் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படம் பார்த்தபிறகு இப்படம்பற்றிய கருத்தை எல்லோரும் மாற்றிக்கொள்வார்கள். பட வாய்ப்பு இல்லாததால் அடல்ட் படத்தில் நடித்தீர்களா என்கிறார்கள். எனக்கு கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது’ என்றார்.
32