1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், தபு நடித்து வெளியான மலையாள படம், காலாபானி. பிரபு நடித்த முதல் மலையாள படமான இதை, சிறைச்சாலை என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து எஸ்.தாணு வெளியிட்டார். தற்போது மீண்டும் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு இணைந்து நடித்துள்ள மலையாள படமான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற படத்தை, மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் எஸ்.தாணு டப்பிங் செய்து வெளியிடுகிறார்.அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுகாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா நடித்துள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி நபேல் இசை அமைத்துள்ளார். ராகுல் ராஜ், அன்கித் சூரி, லில் இவான்ஸ் ரோடர் ஆகியோர் பின்னணி இசை அமைத்துள்ளனர். ஆர்.பி.பாலா வசனம் எழுதியுள்ளார். வரும் 26ம் தேதி படம் வெளியாகிறது.
33