சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று . ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பல விருதுகளையும் பெற்றது.தற்போது இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது. இங்கல்ல கேரளாவில். வருகிற 26ம் தேதி கேரளா முழுவதும் வெளியாகும் இந்த படத்திற்கு அதிகாலை காட்சி, சிறப்பு காட்சி, ரசிகர் காட்சி ஏன பயங்கரமான உற்சாகத்தில் இருக்கிறார்கள் கேரளாவில் உள்ள சினிமா ரசிகர்கள். தமிழ்நாட்டிலும் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று இங்குள்ள ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தியேட்டரில் வெளியாகும் சூரரைப் போற்று: இங்கல்ல, கேரளாவில்
0 comment
5