ஐதராபாத்: கடந்த 2015ல் சிவா இயக்கத்தில் அஜித் குமார், ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்த படம், ‘வேதாளம்’. அஜித் குமார் தங்கையாக லட்சுமி மேனன் நடித்தார். தற்போது அந்த படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சிரஞ்சீவி தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசை அமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தில், தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் டப்பிங் பேசினார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். தவிர ‘ரகு தாத்தா’, ‘சைரன்’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
70